2025ஆம் ஆண்டு கா.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகள் அண்மையில் வெளியாகியுள்ளன.
இப்பரீட்சைக்கு தோற்றிய யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரி மாணவி செல்வி கிசாணி தேவதாஸ் உயிரியல் தொழினுட்ப பிரிவில் மாவட்ட நிலையில் முதலாமிடத்தையும் அகில இலங்கை ரீதியில் 27ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்டுள்ளார்.
செல்வி கிசாணி தேவதாஸ் அவர்கள் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களை சித்திரை மாதம் 06ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் சந்தித்து ஆசீர் பெற்றுக்கொண்டார்.

