Month: November 2024

ஆயருடனான சந்திப்பு

வடமாகாண கடற்படை கட்டளை தளபதியாக அண்மையில் பதவியேற்றுள்ள Rear Admiral துசார கருணாதுங்க அவர்கள் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இச்சந்திப்பு கடந்த 18ஆம் திகதி திங்கட்கிழமை யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் நடைபெற்றது.

யாழ். மறைமாவட்ட குருக்களுக்கான வருடாந்த தியானம்

யாழ். மறைமாவட்ட குருக்களுக்கான வருடாந்த தியானம் இரண்டு குழுக்களாக முன்னெடுக்கப்பட்ட நிலையில் இரண்டாம் குழுவினருக்கான தியானம் கடந்த 18ஆம் திகதி தொடக்கம் 22ஆம் திகதி வரை பண்டத்தரிப்பு புனித பற்றிமா அன்னை தியான இல்லத்தில் நடைபெற்றது. இயேசு சபையை சேர்ந்த அருட்தந்தை…

திருத்தொண்டர் திருநிலைப்படுத்தப்படுத்தல் திருச்சடங்கு

மன்னார் மறைமாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட திருத்தொண்டர் திருநிலைப்படுத்தப்படுத்தல் திருச்சடங்கு கடந்த 18ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்றது. மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை இம்மானுவேல் பெர்னான்டோ அவர்களின் தலைமையில் நடைபெற்ற திருநிலைப்படுத்தல் திருச்சடங்கு திருப்பலியில் அருட்சகோதரர் தர்சன் அவர்கள் திருத்தொண்டராக…

விசேட தேவையுடையவர்களின் உற்பத்திக் கண்காட்சி மற்றும் சந்தைப்படுத்தல்

கரித்தாஸ் மன்னார் வாழ்வுதய நிறுவனத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட விசேட தேவையுடையவர்களின் உற்பத்திக் கண்காட்சி மற்றும் சந்தைப்படுத்தல் நிகழ்வு 22ஆம் திகதி வெள்ளிக்கிழமை மன்னார் நகர சபை மண்டபத்தில் நடைபெற்றது. நிறுவன இயக்குநர் அருட்தந்தை அருள்ராஜ் அவர்களின் தலைமையில்; “நாமும் சாதனையாளர்கள்” என்னும்…

சிற்றாலய திறப்பு விழா

தாளையடி பங்கின் உடுத்துறை வத்திரியான் பிரதேசத்தில் அமைக்கப்பட்டுவந்த குழந்தை இயேசு சிற்றாலய கட்டுமான பணிகள் நிறைவடைந்த நிலையில் அச்சிற்றாலய திறப்பு விழா கடந்த 16ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. சிற்றாலயத்தை பங்குத்தந்தை அருட்தந்தை யஸ்ரின் ஆதர் அவர்கள் ஆசீர்வதித்து திறந்துவைத்தார்.