போர்டோவின் திருக்குடும்ப கன்னியர் சபை உருவாக்கப்பட்ட 200 ஆண்டு நிறைவு நாள் நிகழ்வு 19.09.2020 சனிக்கிழமை மன்னார் மடுத்திருத்தலத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மதியம் 12.00 மணியளவில் மடுத்திருத்தலத்தில் மன்னார் மறைமாவட்ட ஆயர் அருட்கலாநிதி இம்மானுவேல் பெர்னாண்டோ தலைமையில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.

தமிழ், சிங்களம், ஆங்கிலம், இலத்தீன் மொழிகளில் நடைபெற்ற சிறப்பு திருப்பலியில் திருக்குடும்ப பிள்ளைகள், திருக்குடும்ப இளையோர், திருக்குடும்ப பொதுநிலையினர், திருக்குடும்ப குருக்கள், திருக்குடும்ப கன்னியர், திருமட சார்பற்ற சகோதரிகளென 1000ற்கும் அதிகமானோர் பங்குபற்றி செபித்தனர். இந்நிகழ்வு யாழ்ப்பாணம், கொழும்பு மாகாணங்களின் முதல்வர்கள் முறையே அருட்சகோதரிகள் தியோபின் குருஸ், யஸ்மின் ஆகியோரின் தலைமையில் இருமாகாணமும் இணைந்து இந்நிகழ்வு முன்னெடுக்கப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

By admin