யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டதன் 175ஆவது ஆண்டை முன்னிட்டு பல சிறப்பு நிகழ்வுகள் அங்கு முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
இதன் ஒரு நிகழ்வாக லண்டன் மக்மிலன் ஹாட் பவுண்டேசன் ஆதரவுடன் அழைக்கப்பட்ட பாடசாலைகளுக்கிடையே நடாத்தப்பட்ட 12 வயதிற்குட்பட்டவர்களுக்கான காற்பந்தாட்ட போட்டி புரட்டாதி மாதம் 05ஆம் திகதி வெள்ளிக்கிழமை யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.
யாழ்ப்பாணத்தை சேர்ந்த 11 பாடசாலைகளின் அணிகள் பங்குபற்றிய இப்போட்டியில் யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி முதலாமிடத்தை பெற்று சம்பியன் கிண்ணத்தை கைப்பற்றியதுடன் சென் ஜோன்ஸ் கல்லூரி இரண்டாமிடத்தையும் இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி மூன்றாமிடத்தையும் பெற்றுக்கொண்டன.