யாழ். மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இளையோருக்கான கிறிஸ்மஸ் கரோல் பாடல் போட்டி மார்கழி மாதம் 21ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ். மறைமாவட்ட மறைக்கல்வி நிலைய மண்டபத்தில் நடைபெற்றது.
ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை யோன் குருஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மறைக்கோட்ட போட்டிகளில் முதலாம் இரண்டாம் இடங்களைப் பெற்ற 09 குழுக்கள் பங்குபற்றியிருந்தன.
இப்போட்டியில் புலோப்பளை பங்கு முதலாமிடத்தையும் பாண்டியன்தாழ்வு பங்கு இரண்டாமிடத்தையும் பருத்தித்துறை பங்கு மூன்றாமிடத்தையும் பெற்றுக்கொண்டன.
போட்டி நிறைவில் வெற்றிபெற்றவர்களுக்கான பரிசளிப்பும் பங்குபற்றியவர்களுக்கான நினைவுச் சின்னங்களும் வழங்கிவைக்கப்பட்டன.
யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள் பிரதம விருந்தினராகவும் யாழ். மறைமாவட்ட மறைக்கல்வி நிலைய இயக்குநர் அருட்தந்தை டியூக் வின்சன்ட் அவர்கள் சிறப்பு விருந்தினராகவும் கலந்துகொண்ட இந்நிகழ்வில் மறைக்கோட்ட இளையோர் ஒன்றிய இணைப்பாளர்களும் பங்குத்தந்தையர்களும் பங்குபற்றியிருந்தனர்.

