இலங்கை பாடசாலைகள் காற்பந்தாட்ட சங்கம் UK தமிழ் பாடசாலைகள் சங்க அனுசரணையில் முன்னெடுத்த 14 வயது பிரிவினருக்கான காற்பந்தாட்ட சுற்றின் இறுதிப்போட்டி ஐப்பசி மாதம் 09ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை வசாவிளான் மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில் பங்குபற்றிய யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி அணி 01:00 என்ற கணக்கில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணியை வென்று சம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி காலிறுதி போட்டியின் சமநிலை தவிர்ப்பில் வசாவிளான் மத்திய கல்லூரியை 04:03 என்ற கோல் கணக்கிலும் அரையிறுதி போட்டியில் யாழ்ப்பாணம் சென் ஜோண்ஸ் கல்லூரியை 03:01 என்ற கோல் கணக்கிலும் வெற்றியீட்டியது.