தேயிலைதோட்ட வேலைக்காக மலையக மக்கள் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டதன் 200ஆவது ஆண்டை நினைவுகூரும் முகமாக இலங்கை தேசிய கிறிஸ்தவ மன்றத்தினால் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு யாழ்ப்பாணம் கலைத்தூது கலையக மண்டபத்தில் 25ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மலையக மக்களின் அவலங்களை ஒத்துணரல் மற்றும் தோழமைச் செயற்பாடுகளைத் திட்டமிடல் என்னும் கருப்பொருளில் முன்னெடுக்கப்பட்ட இந்நிகழ்விற்குஇலங்கை தேசிய கிறிஸ்தவ மன்ற பொதுச்செயலாளர் அருட்தந்தை சுஜிதர் சிவநாயம் அவர்களும் அரசியல் ஆய்வாளர் மற்றும் சட்டத்தரணி திரு. ஜோதிலிங்கம் அவர்களும் திரு. நிலாந்தன் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டதுடன் டிக்கோயா நுண்கலைக் கல்லூரி மாணவர்களின் நாட்டிய நாடகமும் பொதுக்கூட்டம் என்பனவும் இடம்பெற்றன.

By admin