சாட்டி புனித சிந்தாத்திரை அன்னை திருத்தல துணைப்பங்கான வெண்புரவிநகர் புனித அந்தோனியார் ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட மறைக்கல்வி மாணவர்கள் மற்றும் மறையாசிரியர்களுக்கான ஒளிவிழா ஒன்றுகூடல் மார்கழி மாதம் 28ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை பாஸ்கரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலைநிகழ்வுகள் இடம்பெற்றதுடன் மாணவர்களுக்கான அன்பளிப்புக்களும் வழங்கிவைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் செபமாலைதாசர் சபை அருட்தந்தை அன்ரனி அவர்கள் பிரதம விருந்தினராகவும் சாட்டி புனித சிந்தாத்திரை அன்னை திருத்தல வதிவிட குரு அருட்தந்தை அன்ரனிதாஸ் மற்றும் அருட்தந்தை ஜெயசேகரம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாவும் கலந்துகொண்டனர்.

