இளையோர் பாதுகாவலர் புனித டொன் போஸ்கோவைப் பற்றி அறிந்துகொள்ளும் நோக்கில் பல்லவராயன்கட்டு, கிளிநொச்சி, முருங்கன், மாங்குளம் டொண் பொஸ்கோ நிறுவனங்களில் கல்வி பயிலும் மாணவர்களை இணைத்து முன்னெடுக்கப்பட்ட வினா-விடை, பாடல், நடனம் மற்றும் ஓவிய போட்டிகள் பங்குனி மாதம் 28ஆம் திகதி சனிக்கிழமை முருங்கன் டொண் பொஸ்கோ பாடசாலையில் நடைபெற்றன.
பல்லவராhயன்கட்டு டொண் பொஸ்கோ ஆங்கில பாடசாலை அதிபர் அருட்தந்தை மெல்வின் றோய் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் அருட்தந்தை செபஞானம் அவர்களின் நெறிப்படுத்தலில் இடம்பெற்ற இப்போட்டிகளின் வினாவிடை தனிச்சுற்றில் முருங்கன் அணியை சேர்ந்த மாணவர்களான பிரகாசம் ஆன் வேர்ஜின் முதலாமிடத்தையும் றொசேல் இரண்டாமிடத்தையும் திருமகன் மூன்றாமிடத்தையும் பெற்றுக்கொண்டனர்.
வினாவிடை குழுச்சுற்றில் முருங்கன் அணியினர் முதலாமிடத்தையும் பல்லவராயன்கட்டு அணியினர் இரண்டாமிடத்தையும் மாங்குளம் அணியினர் மூன்றாமிடத்தையும் கிளிநொச்சி அணியினர் நான்காமிடத்தையும் பெற்றுக்கொண்டனர்.
தொடர்ந்து இடம்பெற்ற அனைத்து போட்டிகளின் மொத்த புள்ளிகளின் அடிப்படையில் பல்லவராயன்கட்டு அணியினர் முதலாமிடத்தையும் மாங்குளம் அணியினர் இரண்டாமிடத்தையும் முருங்கன் அணியினர் மூன்றாமிடத்தையும் கிளிநொச்சி அணியினர் நான்காமிடத்தையும் பெற்றுக்கொண்டனர்.
இலங்கை சலேசிய உபமாகாண உப தலைவர் அருட்தந்தை போல் சஜீவக்க அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்த இந்நிகழ்வில் வட மாகாண சலேசிய குருக்கள், அருட்சகோதரிகள், அருட்சகோதரர்கள், மாணவர்கள், நெறிப்படுத்திய ஆசிரியர்கள், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள், நடுநிலையாளர்களென பலரும் கலந்துகொண்டனர்.

