விசுவமடு புனித இராயப்பர் ஆலய வளாகத்தில் வியாகுல அன்னை மரியின் ஊழியர் சபை அருட்சகோதரிகளால் நடாத்தப்பட்டுவரும் புனித இராயப்பர் முன்பள்ளி ஆரம்பிக்கப்படடதன் முதலாம் ஆண்டுவிழா யூன் மாதம் 29ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

முன்பள்ளி காப்பாளர் அருட்சகோதரி ஸ்ரெலா அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கவிதை, பாடல், நடனம், நாடகம், விடுகதைப்போட்டி, வினோத உடைப்போட்டி என்பன இடம்பெற்றன.

இந்நிகழ்வில் சுன்னாகம் பங்குத்தந்தை அருட்தந்தை நிக்சன் கொலின் அவர்கள் பிரதம விருந்தினராகவும் மாணிக்கபுரம் பாரதி மகாவித்தியாலய அதிபர் திரு. ஜெயதீசன் அவர்கள் கௌரவ விருந்தினராகவும், தர்மபுரம் பங்குத்தந்தை அருட்தந்தை றேமன்ட் றெனால்ட் மற்றும் மாணிக்கபுரம் கிராம சேவையாளர் திரு. நிசாந்தன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும், கலந்துகொண்டனர்.

By admin