விசுவமடு, புனித இராயப்பர் முன்பள்ளியில் முன்னெடுக்கப்பட்ட சந்தை நிகழ்வு 16ஆம் திகதி வெள்ளிக்கிழமை நேற்றைய தினம் நடைபெற்றது.
இந்நிகழ்வில் உடையார்கட்டு பங்குத்தந்தை அருட்தந்தை அல்வின் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்துகொண்டார்.
இச்சந்தை நிகழ்வில் முன்பள்ளி சிறார்கள் விற்றல் வாங்கல் செயற்பாடுகளில் மிகவும் ஆர்வத்துடன் பங்குபற்றியிருந்தனர்.
புனித இராயப்பர் ஆலய வளாகத்தில் வியாகுல அன்னை மரியின் ஊழியர் சபை அருட்சகோதரிகளால் நடாத்தப்பட்டுவரும் இம்முன்பள்ளியில் 35வரையான சிறார்கள் கல்வி பயின்றுவருகின்றார்கள்.