மன்னார் மறைமாவட்டம் வவுனியா மறைக்கோட்ட அன்பியப் பணியாளர்களுக்கான தவக்கால தியானம் பங்குனி மாதம் 21ஆம் திகதி கடந்த சனிக்கிழமை வவுனியா இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலய மேய்ப்புப்பணி மண்டபத்தில் நடைபெற்றது.

மறைமாவட்ட அன்பிய ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை இராசாநந்தம் நீக்லஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில்
இடம்பெற்ற இந்நிகழ்வில் நற்கருணை ஆராதனையும், ஒன்றுகூடலும் நடைபெற்றன.

ஒன்றுகூடலில் மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் அவர்கள் கலந்து அன்பிய வாழ்வு பற்றி சிறப்புரையாற்றியதுடன் அன்பிய மத்திய குழு உறுப்பினர்களால் கருத்துரைகளும் வழங்கப்பட்டன.

இத்தியானத்தில் 100 வரையான அன்பிய பணியாளர்கள் பங்குபற்றி பயனடைந்தனர்.

By admin