மன்னார் மறைமாவட்டம் வவுனியா பூவரசங்குளத்தில் புதிதாக அமைக்கப்பட்டுவந்த வின்சென்சியன் சபை இல்ல திறப்புவிழா தை மாதம் 22ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது.

அருட்தந்தையர்கள் பசில்கிளைன் மற்றும் மரிகிளைன் ஆகியோரின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஆயர் பேரருட்தந்தை அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் மற்றும் ஓய்வுநிலை ஆயர் பேரருட்தந்தை இம்மானுவேல் பெர்னான்டோ ஆகியோர் கலந்து புதிய இல்லத்தை ஆசீர்வதித்து திறந்துவைத்ததுடன் பேரருட்தந்தை அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் அவர்கள் திருப்பலியை தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.

இந்நிகழ்வில் வின்சென்சியன் சபை தென்னிந்திய மாகாண முதல்வர் அருட்தந்தை அனில் தோமஸ் கரக்கவயில், மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை தமிழ்நேசன், சபை அருட்தந்தையர்கள், குருக்கள், துறவிகளென பலரும் கலந்துகொண்டனர்.

By admin