வவுனிக்குளம் கல்வாரிப்பூங்கா யாத்திரைத்தலத்தில் தவக்கால தியானங்கள் மறைக்கோட்ட ரீதியாக ஒவ்வொரு சனிக்கிழமையிலும் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் முல்லைத்தீவு மறைக்கோட்ட பங்குகளை சேர்ந்த இறைமக்களுக்கான தியானம் பங்குனி மாதம் பங்குனி மாதம் 21ஆம் திகதி சனிக்கிழமை இன்று நடைபெற்றது.

திருத்தல பரிபாலகர் அருட்தந்தை நியூமன் அவர்களின் வழிநடத்தலில் நடைபெற்ற இத்தியானத்தில் சிலுவைப்பாதை, நற்கருணை ஆராதனை, ஒப்புரவு அருட்சாதனம், திருப்பலி என்பன இடம்பெற்றன.

திருப்பலியை யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.

இத்தியானத்தில் இறைமக்கள் பலரும் பக்தியுடன் பங்குபற்றினர்.

By admin