சட்டத்தரணியும் மனித உரிமைகள் செய்பாட்டாளருமான திரு. பகவதாஸ் ஸ்ரீகந்ததாஸ் அவர்களால் எழுதப்பட்ட கிருசாந்தி கொலை வழக்கு தொடர்பான வழக்கு விசாரணை சித்தரிக்கும் “வன்மம்” தொகுப்பு நூல் அறிமுக நிகழ்வு புரட்டாதி மாதம் 02ஆம் திகதி செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம் செம்மணி சந்தியில் நடைபெற்றது.
தமிழர் வாழ்வுரிமை மையத்தின் ஏற்பாட்டில் திரு. மதுசூதனன் அவர்களின் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட இந்நிகழ்வில் அருட்தந்தை வசந்தன், திரு. பொ. ஜங்கரசேநன், திரு. நாகமுத்து இன்பநாயகம், கத்யான அமரசிங்க, தரிந்து உடுவரகெதர, யூட் டினேஸ், ரனித்தா ஞானராஜா, வீரசிங்கம், உதயசீலன் கற்கண்டு, நடராஜர் காண்டீபன் ஆகியோர் கலந்து கருத்துரைகள் வழங்கியிருந்தனர்.
இந்நிகழ்வில் அரசியல் தவைர்கள் மனித உரிமை செயற்பாட்டாளர்கள், பொதுமக்களென பலரும் கலந்துகொண்டனர்.
சட்டத்தரணி பகவதாஸ் ஸ்ரீகந்ததாஸ் அவர்களால் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட இந்நூல் தற்போது தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.