அக்கராயன்குளம் பங்கின் வன்னேரிக்குளம் புனித காணிக்கை அன்னை ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை அல்பேன் சேகர் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மாசி மாதம் 02ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது.

தை மாதம் 25ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி மாசி மாதம் 01ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.

திருவிழா திருப்பலியை பங்குத்தந்தை அவர்களும் நற்கருணைவிழா திருப்பலியை அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை அல்றின் அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர்.

By admin