வட மாகாண பாடசாலைகளுக்கிடையிலான குத்துச்சண்டை போட்டி ஆகஸ்ட் மாதம் 11ஆம் திகதி திங்கட்கிழமை முல்லைத்தீவு வித்தியானந்த கல்லூரியில் நடைபெற்றது.
இப்போட்டியில் பங்குபற்றிய யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி மாணவர்களான செல்வன் சுலக்சன் 16 வயது பிரிவின் 44 -46 கிலோ எடைப்பிரிவில் முதலாமிடத்தையும் செல்வன் விசாலகன் 20 வயது பிரிவின் 46-49 கிலோ எடைப்பிரிவில் முதலாமிடத்தையும் பெற்று தங்கப்பதக்கங்களையும் செல்வன் அனெக்ஸ் 20 வயது பிரிவின் 46-49 கிலோ எடைப் பிரிவில் மூன்றாமிடத்தையும் செல்வன் றொசினோ 20 வயது பிரிவின் 56–60 கிலோ எடைப் பிரிவில் மூன்றாமிடத்தையும் பெற்று வெண்கல பதக்கங்களையும் பெற்றுக்கொண்டனர்.