வட்டுக்கோட்டை யாழ்ப்பாண கல்லூரியின் ஆங்கில தினவிழா கடந்த புரட்டாதி மாதம் 19ஆம் திகதி வெள்ளிக்கிழமை கல்லூரியின் “ஒட்லி” மண்டபத்தில் நடைபெற்றது.

கல்லூரி அதிபர் திருமதி ருசீPரா குலசிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் உரைகள், கவிதைகள், அபிநயப் பாடல்கள், நாடகங்கள் என்பவற்றுடன் சிறப்பு நிகழ்வாக பிரபல உலக நாடக ஆசிரியர் சேக்ஸ்பியரின் “Twelfth Night” நாடகக் காட்சிகளும் மேடையேற்றப்பட்டன.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட யாழ்ப்பாணம் கொழும்புத்துறை புனித பிரான்சிஸ் சவேரியார் உயர் குருத்துவக் கல்லூரி துணை அதிபர் அருட்தந்தை ஜெராட் சவரிமுத்து அவர்கள், “ஆங்கில மொழியைப் பயில்வதற்கு மாணவர்கள் ஏன் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்?” என்ற தலைப்பில், காட்சிப்படுத்தல்களுடன் உரை வழங்கினார்.

By admin