யாழ். மறைமாவட்ட மறைக்கல்வி நடுநிலையத்தின் ஏற்பாட்டில் வட்டக்கச்சி பங்கில் முன்னெடுக்கப்பட்ட மறைக்கல்வி மாணவர்கள் மற்றும் மறையாசிரியர்களுக்கான கருத்தமர்வு யூலை மாதம் 13ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை ராஜ் டிலக்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையில் நடைபெற்ற இந்நிகழ்வில் திருப்பலி, கருத்துரைகள், குழுச்செயற்பாடுகள், விளையாட்டுக்கள் என்பன இடம்பெற்றன.

திருப்பலியை யாழ். மறைமாவட்ட மறைக்கல்வி நிலைய இயக்குநர் அருட்தந்தை டியூக் வின்சன்ட் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.

இந்நிகழ்வில் 120 மாணவர்களும் 16 மறையாசிரியர்களும் பங்குபற்றி பயனடைந்தனர்.

By admin