வட்டக்கச்சி பங்கு மக்களுக்கான தவக்கால தியானம் பங்குனி மாதம் 21ஆம் திகதி கடந்த சனிக்கிழமை புனித சூசையப்பர் ஆலயத்தில் நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை ராஜ் டிலக்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இத்தியானத்தில் ஒப்பாரிப்பாடல்கள், நற்கருணை வழிபாடு, ஒப்புரவு அருட்சாதனம், திருப்பலி என்பவற்றுடன் பங்கு இளையோர் மற்றும் மறைக்கல்வி மாணவர்களின் காட்சி சிலுவைப்பாதையும் நடைபெற்றது.

நற்கருணை வழிபாட்டை அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை ஜீவரட்ணம் அவர்கள் நெறிப்படுத்தியதுடன் திருப்பலியை அருட்தந்தை செபமாலை பெரேரா அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.

இந்நிகழ்வில் அருட்சகோதரிகள், பங்குமக்களென 400 வரையானவர்கள் பங்குபற்றினர்.

By admin