மணியந்தோட்டம் பங்கு வசந்தபுரம் புனித யாகப்பர் ஆலய பிள்ளைகளுக்கான முதல்நன்மை அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு ஐப்பசி மாதம் 04ஆம் திகதி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது.
பங்குத்தந்தை அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை வரதன் குருஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற திருப்பலியில் 08 சிறார்கள் முதல்நன்மை அருட்சாதனத்தை பெற்றுக்கொண்டனர்.
இத்திருப்பலியில் திருவுள பணியாளர் சபை அருட்தந்தை பிராங் டவ் அவர்களும் கலந்து செபித்தார்.