தேசிய ரீதியில் பாடசாலை மாணவர்களுக்கிடையே நடாத்தப்பட்ட ரோபோ தொழினுட்பம் மற்றும் புத்தாக்க போட்டி புரட்டாதி மாதம் 25ஆம் திகதி வியாழக்கிழமை கொழும்பு பத்தரமுல்ல அபேகம வளாகத்தில் இடம்பெற்றது.
இப்போட்டியில் யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியை சேர்ந்த 3 மாணவர்கள் பங்குபற்றிய நிலையில் ஆறாம் தர மாணவன் செல்வன் பிரம்மிஜெய் றெமன்ஸ் அவர்கள் Smart House என்னும் புத்தாக்கத்திற்காக விசேட விருதை பெற்றுக்கொண்டார்.
இப்போட்டியில் பங்குபற்றிய வயது குறைந்த மாணவன் இவர் என்பதுடன் மாகாணமட்ட ரோபோ தொழினுட்பம் மற்றும் புத்தாக்க போட்டியில் முதலிடம் பெற்றவர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.