உருத்திரபுரம் பங்கின் யூனியன்குளம் புனித அந்தோனியார் ஆலய புனரமைப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் அவ்வாலய திறப்புவிழா பங்குனி மாதம் 01ஆம் திகதி கடந்த கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை ஜோண் கனீசியஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் கலந்து ஆலயத்தை ஆசீர்வதித்து திறந்துவைத்து திருப்பலியை தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.
இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், இறைமக்களென பலரும் கலந்துகொண்டனர்.

