இலங்கை நாட்டில் ஏற்பட்ட டிட்வா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நலன் வேண்டியும், இறந்தவர்களுக்கான ஆத்ம சாந்திக்காகவும், புதிய வருடத்தில் இறை ஆசீர்வேண்டியும், யாழ். மாவட்ட சர்வ மத பேரவையால் முன்னெடுக்கப்பட்ட சர்வமத அஞ்சலி வழிபாடு மார்கழி மாதம் 30ஆம் திகதி செவ்வாயக்கிழமை யாழ்ப்பாணம் நாகவிகாரையில் நடைபெற்றது.
பேரவை தலைவர் சிவஸ்ரீ கிருபானந்த குருக்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இவ்வழிபாட்டில் ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு இறந்தவர்களுக்கான மலரஞ்சலியும், அஞ்சலி உரைகளும், ஆசியுரைகளும் இடம்பெற்றன.
இவ்வழிபாட்டில் இணைத்தலைவர்கள் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜோசப்தாஸ் ஜெபரட்ணம், நாகவிகாரை பிரதம குரு மீஹாஹயண்துரை சிறிவிமல தேரர், ரலீம் மௌலவி, அங்கிலிக்கன் திருச்சபை குருமுதல்வர் அருட்தந்தை செல்வன், மற்றும் பேரவை அங்கத்தவர்கள் பங்குபற்றியிருந்தனர்.

