யாழ். மாகாண திருக்குடும்ப கன்னியர் சபை புதிய தலைமைத்துவ குழு பணிப்பொறுப்பேற்கும் நிகழ்வு ஆவணி மாதம் 23ஆம் திகதி சனிக்கிழமை யாழ். மாகாண திருக்குடும்ப கன்னியர் மடத்தில் நடைபெற்றது.

யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற திருப்பலியில் அருட்சகோதரி ஜொய்லின் றாஜி ஸ்ரான்லி அவர்கள் மாகாண தலைவியாகவும் அருட்சகோதரி ஜெசிக்கா அல்பேட் பற்றிக் அவர்கள் பொருளாளர் ஆலோசகராகவும், அருட்சகோதரிகள் மெற்றில்டா வசந்தி, கிறேசா சூசைதாசன், சகாயநாயகி பஸ்ரியாம்பிள்ளை, வயலட் ஸ்ரனிஸ்லஸ் ஆகியோர் ஆலோசகர்களாகவும் தமது பணிப்பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளனர்.

By admin