ஜீபிலி ஆண்டை சிறப்பித்து யாழ். மறைமாவட்ட வின்சென்ட் டி போல் சபையின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு யூலை மாதம் 20ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ். புனித மரியன்னை பேராலயத்தில் நடைபெற்றது.
சபை ஆன்மீக ஆலோசகர் அருட்தந்தை நேசநாயகம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் திருச்செபமாலை, பாவசங்கீர்த்தனம், யூபிலி ஆண்டு தொடர்பான சிறப்புரை என்பன இடம்பெற்றன.
சிறப்புரையை திருவுளப்பணியாளர் சபை அருட்தந்தை பிராங் டவ் அவர்கள் வழங்கியிருந்தார்.
தொடர்ந்து சபை அங்கத்தவர்கள் யாழ். புனித மரியன்னை பேராலயத்தில் அமைக்கப்பட்டுள்ள யூபிலி புனித கதவினூடாக போராலயத்திற்குள் நுழைந்து அங்கு இடம்பெற்ற திருப்பலியில் பங்குபற்றினர்.
திருப்பலியை யாழ். மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை ஜெறோ செல்வநாயகம் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.
திருப்பலி நிறைவில் யாழ். மறைமாவட்ட மறைக்கல்வி நிலைய கேட்போர் கூடத்தில் சபை அங்கத்தவர்களுக்கான கூட்டம் நடைபெற்றது.
இந்நிகழ்வில் மறைமாவட்ட வின்சென்ட் டி போல் பந்திகளின் பிரதிநிதிகள், அருட்சகோதரிகளென 150ற்கும் அதிகமானவர்கள் பங்குபற்றியிருந்தனர்.