கிறிஸ்து பிறப்பு விழாவில் வீடுகளில் பாலன் குடில் அமைக்கும் பாரம்பரியத்தை ஊக்குவிக்கும் நோக்கில் யாழ். மறைமாவட்ட மறைநதி கத்தோலிக்க ஊடக மையத்தால் பாலன்குடில் போட்டி நடாத்த ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

வயது வேறுபாடின்றி விரும்பியவர்கள் பங்குபற்றக்கூடிய இப்போட்;டியில் பங்குபற்றுபவர்கள் வீடுகளில் கிறிஸ்துபிறப்பு தினத்தில் அமைக்கும் குடில்களை அழகாக வடிவமைத்து அதனை கையடக்கத் தொலைபேசியில் வீடியோ பதிவு செய்து மார்கழி மாதம் 25ஆம் திகதி 0741626719 என்ற இலக்கத்திற்கு WhatsApp செயலியூடாக அனுப்பவேண்டும்.

பார்வையாளர்களின் எண்ணிக்கைக்கேற்ப வெற்றியாளர்கள் தெரிவுசெய்யப்பட்டு பரிசில்கள் வழங்கப்படும்.

By admin