யாழ். மறைமாவட்ட மரியாயின் சேனை கொமிற்சிய ஆச்சேஸ் விழா பங்குனி மாதம் 15ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ். புனித மரியன்னை பேராலயத்தில் நடைபெற்றது.

மரியாயின் சேனை ஆன்மீக இயக்குநர் அருட்தந்தை சகாயநாயகம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஒன்றுகூடலும், கருத்துரையும், அர்பண புதுப்பித்தலும், திருப்பலியும் இடம்பெற்றன.

மரியாயின் சேனை செபத்துடன் ஆரம்பமாகிய இந்நிகழ்வில் அகவொளி குடும்பநல நிலைய இயக்குநர் அருட்தந்தை டேவிட் அவர்களின் “மரியாயின் சேனையினரின் அர்ப்பணமும் பணிகளும்” பற்றிய கருத்துரையும் கருத்துரை நிறைவில் சேனை அங்கத்தவர்களின் அர்ப்பண புதுப்பித்தலும் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் சிறப்புத் திருப்பலியும் இடம்பெற்றன.

இந்நிகழ்வில் 1300இற்கும் அதிகமான மரியாயின் சேனை அங்கத்தவர்கள் கலந்து தமது வாக்குறுதிகளை புதுப்பித்தனர்.

By admin