யாழ். மறைமாவட்ட பொதுநிலையினர் கழக கூட்டம் பங்குனி மாதம் 02ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை யாழ். மறைமாவட்ட மறைக்கல்வி நிலைய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

கழக இயக்குநர் அருட்தந்தை மவுலிஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் யாழ். மறைமாவட்ட அகவொளி குடும்பநல நிலைய உதவி இயக்குநர் அருட்தந்தை ஜெராட் அவர்கள் கலந்து நவீன தொடர்பாடல் ஊடகங்களும் அவற்றின் பயன்பாடு பற்றியும் கருத்துரை வழங்கினார்.

தொடர்ந்து கழக எதிர்கால செயற்றிட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டு தீர்மானங்கள் எடுக்கப்பட்டதுடன் புதிய வளவாளர் குழு தெரிவும் இடம்பெற்றது.

By admin