யாழ். மறைமாவட்ட பொதுநிலையினர் கழகத்தின் ஏற்பாட்டில் கழக அங்கத்தவர்களுக்காக முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு மார்கழி மாதம் 06ஆம் திகதி சனிக்கிழமை இன்று யாழ். மறைமாவட்ட மறைக்கல்வி நிலைய கேட்போர்கூடத்தில நடைபெற்றது.

கழக இயக்குநர் அருட்தந்தை மவுலிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில்; வழிபாடும் தொடர்ந்து ஒன்றுகூடலும் இடம்பெற்றன.

வழிபாட்டு நிகழ்வில் நற்கருணை ஆராதனை, தியான உரை, ஒப்புரவு அருளடையாளம் என்பன நடைபெற்றதுடன் ஒன்றுகூடல் நிகழ்வில் யாழ். மறைமாவட்ட மறைநதி கத்தோலிக்க ஊடகமைய இயக்குநர் அருட்தந்தை அன்ரன் ஸ்ரீபன் அவர்கள் கலந்து வருகின்ற வருடம் யாழ் மறைமாவட்டத்தில் கடைப்பிடிக்கப்பட்டவுள்ள சமூகதொடர்பு ஆண்டு தொடர்பாக சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்வில் மறைக்கோட்ட கழக அங்கத்தவர்கள், பக்திசபை பிரதிநிதிகள், நற்கருணை பணியாளர்களென 100 வரையானவர்கள் பங்குபற்றியிருந்தனர்.

By admin