யாழ். மறைமாவட்ட புனித வின்சன்ட் டி போல் மத்திய சபையின் 43ஆவது வருடாந்த பொதுக்கூட்டமும் வின்சன்ட் டி போல் திருவிழாவும் புரட்டாதி மாதம் 28ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நாவாந்துறை புனித மரியாள் ஆலயத்தில் நடைபெற்றது.

சபை ஆன்மீக ஆலோசகர் அருட்தந்தை நேசநாயகம் அவர்களின் வழிநடத்தலில் தலைவி சகோதரி மரியநாயகி அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் கலந்து திருவிழா திருப்பலியை தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.

திருப்பலி நிறைவில் சபையில் 25 வருடங்கள் பணியாற்றிய அங்கத்தவர்களுக்கான கௌரவிப்பும் தொடர்ந்து பொதுக்கூட்டமும், அதிஸ்ட இலாப சீட்டிழுப்பும் நடைபெற்றன.

யாழ். பல்கலைக்கழக கிறிஸ்தவ நாகரீகத்துறை விரிவுரையாளர் வினிபிறீடா அவர்கள் பிரதம விருந்தினராகவும், வின்சென்டி போல் தேசிய சபை தலைவர் சகோதரர் அழகக்கோண் மற்றும் நாவாந்துறை பங்குத்தந்தை அருட்தந்தை இயூயின் பிரான்சிஸ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்துகொண்ட இந்நிகழ்வில் மத்திய சபை உறுப்பினர்கள், பந்நிகளின் அங்கத்தவர்களென 600ற்கும் அதிகமானவர்கள் பங்குபற்றியிருந்தனர்.

இவ்அதிஸ்ட இலாப சீட்டிளுப்பில் சீட்டிலக்கம் 4325 முதலாமிடத்தையும் சீட்டிலக்கம் 6636 இரண்டாமிடத்தையும் சீட்டிலக்கம் 5358 முன்றாமிடத்தையும் சீட்டிலக்கங்கள் 8860, 3277, 9783, 2501, 0062 ஆகியவை ஆறுதல் பரிசில்களையும் பெற்றுக்கொண்டுள்ளதுடன் வெற்றியாளர்கள் தமது பரிசுகளை அலுவலகத்தில் பெற்றுக்கொள்ள முடியுமென அருட்தந்தை நேசநாயகம் அவர்கள் தெரிவித்துள்ளார்.

By admin