யாழ். மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழு இயக்குநராக அருட்தந்தை அகஸ்ரின் அவர்கள் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களால் அண்மையில் நியமனம் பெற்றுள்ளார்.
யாழ். மறைமாவட்டத்தின் ஓர் அங்கமான இவ் ஆணைக்குழு கடந்த காலங்களில் அருட்தந்தை மங்களராஜா அவர்களின் தலைமையில் அரசியல், நீதி, சமாதானம் போன்ற தளங்களில் தமிழ் மக்கள் எதிர்கொண்ட இடர்பாடுகளை வெளிக்கொணர்ந்து அவற்றை நிவர்த்தி செய்ய தன்னால் இயன்ற பணிகளை ஆற்றிவந்துள்ளதுடன் தொடர்ந்தும் இலங்கை நாட்டின் சமாதானத்திற்காகவும் சமூக பிரச்சினைகளுக்காகவும் குரல் கொடுத்து வருகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

By admin