யாழ். மறைமாவட்ட குருக்களுக்கான தவக்கால தியானம் பங்குனி மாதம் 12ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை சாட்டி புனித சிந்தாத்திரை அன்னை திருத்தலத்தில் நடைபெற்றது.
யாழ். மறைமாவட்ட குருக்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இத்தியானத்தில் திருச்செபமாலை, சிலுவைப்பாதை தியானம், ஒப்புரவு அருட்சாதனம், நற்கருணை வழிபாடு, தியான உரைகள் என்பன இடம்பெற்றன.
தியானத்தை இந்தியா தமிழ்நாட்டிலிருந்து வருகைதந்தை கப்புச்சின் சபை அருட்தந்தை பீற்றர் அமல்ராஜ் அவர்கள் நெறிப்படுத்தினார்.
தொடர்ந்து குருக்களுக்கான கூட்டம் மன்ற தலைவர் அருட்தந்தை ஆனந்தகுமார் அவர்களின் தலைமையில் நடைபெற்றதுடன் இக்கூட்டத்தில் மறைமாவட்ட குருக்கள் ஒன்றியத்தின் புதிய நிர்வாகத்தெரிவும் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம், குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் மற்றும் 90 வரையான குருக்கள் பங்குபற்றியிருந்தனர்.

By admin