இலங்கை நாட்டில் நடைமுறையிலுள்ள பயங்கரவாத தடை சட்டத்தை இரத்துசெய்து அதற்கு மாற்றீடாக அரசாங்கத்தை பயங்கரவாதத்திலிருந்து காப்பாற்றும் புதிய சட்டத்தை அமுல்படுத்துவதுவாதல் உருவாகவுள்ள நிலமைகள் பற்றிய விழிப்புணர்வையும் அறிவையும் ஏற்படுத்தும் நோக்கில் யாழ். மறைமாவட்ட குருக்களை இணைத்து முன்னெடுக்கப்பட்ட விழிப்புணர்வு கருத்தமர்வு மாசி மாதம் 09ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்றது.

யாழ். மறைமாவட்ட ஆயர் இல்ல கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இக்கருத்தமர்வில் சட்டவாளர் திரு. குருபரன் அவர்கள் வளவாளராக கலந்து கருத்துரை வழங்கி கலந்துரையாடலை வழிப்படுத்தினார்.

இந்நிகழ்வில் 50 வரையான குருக்கள் பங்குபற்றியிருந்தனர்.

By admin