தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரைக்கு எதிராக போராட்டத்தில் கலந்து அங்கு ஏற்பட்ட கலவரத்தில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தாக்கப்பட்டு வாகனத்தில் ஏற்றிச்செல்லப்பட்ட நல்லூர் சிவகுரு ஆதீன தலைவர் தவத்திரு வேலன் சுவாமி அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில் யாழ். மறைமாவட்ட குருக்கள் அவரை பார்வையிட்டு இச்செயலுக்கெதிரான கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சி மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை ஜெயக்குமார் அவர்களின் தலைமையிலான குழுவினர் 29ஆம் திகதி திங்கட்கிழமை, நல்லூர் சிவ ஆலயத்தில் வேலன் சுவாமிகளை சந்தித்து நலம் விசாரித்தனர். இதில் அருட்தந்தை றெக்ஸ் சவுந்தரா, அருட்தந்தை வசந்தன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

பௌத்த குருமாரை பாதுகாக்கும் அரசாங்கம் ஏனைய மதகுருக்கள் மீது கட்டவிழ்த்துவிடும் அடக்குமுறைக்கு எதிராக கத்தோலிக்க மதகுருக்கள் தமது கடும் கண்டனத்தையும் வெளிப்படுத்தியுள்ளனர்.

அத்துடன் 31ஆம் திகதி புதன்கிழமை யாழ். மாவட்ட சர்வமத பேரவையின் சார்பாக இணைத்தலைவர்களில் ஒருவரான யாழ் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்களும் அவருடன் இணைந்து ஒரு அங்கத்தவரும் சுவாமி அவர்களை சந்தித்தது நலம் விசாரித்துள்ளனர்.

By admin