யாழ். மறைமாவட்ட குருக்களுக்கான வருடாந்த தியானம் இரண்டு பிரிவுகளாக முன்னெடுக்கப்பட்ட நிலையில் முதலாம் குழுவினருக்கான தியானம் கார்த்திகை மாதம் கடந்த 03ஆம் திகதி தொடக்கம் 07ஆம் திகதி வரை பண்டத்தரிப்பு தியான இல்லத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மறைமாவட்டத்தை சேர்ந்த இயேசு சபை அருட்தந்தை யூட் டிலக்ஸன் அவர்கள் நெறிப்படுத்திய இத்தியானத்தில் தியான உரைகள், சிறப்பு நற்கருணை ஆராதனைகள், திருப்பலிகள் என்பன இடம்பெற்றன.

இத்தியானத்தில் 60 வரையான குருக்கள் பங்குபற்றியிருந்தனர்.

By admin