யாழ். மறைமாவட்டத்தில் குருக்கள் சிலருக்கான பணிமாற்றங்கள் அண்மையில் நடைபெற்றுள்ளன.
அருட்தந்தை ஜெயக்குமார் அவர்கள் கிளிநொச்சி மறைக்கோட்ட முதல்வராகவும் பங்குத்தந்தையாகவும், அருட்தந்தை யேசுதாஸ் அவர்கள் இளவாலை மறைக்கோட்ட முதல்வராகவும், அருட்தந்தை அன்ரனிபாலா அவர்கள் முழங்காவில் பங்குத்தந்தையாகவும், அருட்தந்தை பிரான்சிஸ் அவர்கள் குழமங்கால் பங்குத்தந்தையாகவும், அருட்தந்தை ஞானப்பிரகாசம் அவர்கள் பரந்தன் பங்குத்தந்தையாகவும், அருட்தந்தை சில்வெஸ்ரர்தாஸ் அவர்கள் இளவாலை புனித யாகப்பர் ஆலய பங்குத்தந்தையாகவும், அருட்தந்தை தயதீபன் அவர்கள் இரணைமாதா நகர் பங்குத்தந்தையாகவும், அருட்தந்தை அன்ரன் கஜீஸ்காந்த் அவர்கள் புதுக்குடியிருப்பு றோ.க வித்தியாலய விடுதி காப்பாளராகவும், அருட்தந்தை அன்ரனி றொக் பஸ்ரியன் அவர்கள் முல்லைத்தீவு பங்கின் உதவி பங்குத்தந்தையாகவும், அருட்தந்தை டினுஷன் அவர்கள் நாவாந்துறை பங்கின் உதவி பங்குத்தந்தையாகவும், அருட்தந்தை றொகான் டியோனி அவர்கள் யாழ். புனித மரியன்னை பேராலய உதவி பங்குத்தந்தையாகவும், அருட்தந்தை றொகான் அவர்கள் குருநகர் பங்கின் உதவி பங்குத்தந்தையாகவும் நியமனம் பெற்றுள்ளனர்.