யாழ். மறைமாவட்ட கத்தோலிக்க சட்டத்தரணிகள் அமைப்பினருக்கான தவக்காலத் தியானம் பங்குனி மாதம் 28ஆம் திகதி சனிக்கிழமை கொழும்புத்துறை திருவுளப்பணியாளர் இல்லத்தில் நடைபெற்றது.

மறைமாவட்ட பொதுநிலையினர் கழக இயக்குநர் அருட்தந்தை மவுலிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் தியான உரை, நற்கருணை வழிபாடு, ஒப்புரவு அருட்சாதனம், திருப்பலி என்பன இடம்பெற்றன.

இவ்வழிபாடுகளை திருவுள பணியாளர் சபை அருட்தந்தை மரியசெல்வன் பிராங் டவ் அவர்கள் நெறிப்படுத்தினார்.

தியான நிறைவில் சட்டத்தரணிகள் அமைப்பு உறுப்பினர்களுக்கான கலந்துரையாடல் இடம்பெற்றது.

By admin