யாழ். மறைமாவட்ட கத்தோலிக்க சட்டவாளர்களுக்கான சிறப்பு ஒன்றுகூடல் மார்கழி மாதம் 07ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொழும்புத்துறை புனித செபமாலை அன்னை ஆலயத்தில் நடைபெற்றது.

மறைமாவட்ட பொதுநிலையினர் கழக இயக்குனர் அருட்தந்தை மவுலிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை ஜெறோ செல்வநாயகம் அவர்களின் தலைமையில் Red Mass சிறப்பு திருப்பலியும் தொடர்ந்து சட்டத்தரணிகளுக்கான ஒன்றுகூடலும் கலந்துரையாடலும் இடம்பெற்றன.

இத்திருப்பலியில் குருநகர் பங்குத்தந்தை அருட்தந்தை யாவிஸ் அவர்களும் இணைந்து செபித்ததுடன், யாழ். மாவட்ட உயர் நீதிமன்ற நீதிபதி உயர்திரு. சூசைதாசன் ஜெனிஸ்சாந்தன், சட்டத்தரணிகள், சட்டத்துறை மாணவர்களென பலரும் கலந்துகொண்டனர்.

யாழ். மறைமாவட்ட கத்தோலிக்க சட்டவாளர் அமைப்பு மறைமாவட்ட பொதுநிலையினர் கழகத்தின் ஓர் அங்கமாக செயற்பட்டு சட்டங்கள் தொடர்பான விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி அவை தொடர்பான ஆலோசனைகளையும் வழங்கிவருகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

By admin