யாழ். மறைமாவட்ட அன்பிய ஆணைக்குழு கூட்டம் பங்குனி மாதம் 02ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை யாழ். மறைமாவட்ட மறைக்கல்வி நிலையத்தில் நடைபெற்றது.

ஆணைக்குழு இயக்குநர் கிளறேசியன் சபை அருட்தந்தை றொனால்ட் சுஜீவன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் மற்றும் அருட்தந்தை ரவிச்சந்திரன் ஆகியோர் கலந்து கருத்துரை வழங்கினர்.

தொடர்ந்து ஆணைக்குழுவின் எதிர்கால செயற்திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டு தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.

இந்நிகழ்வில் மறைக்கோட்ட இணைப்பாளர்கள் மற்றும் பிரதிநிதிகள் பங்குபற்றியிருந்தனர்.

By admin