உலகத் திருஅவையில் அனுஸ்டிக்கப்பட்ட 2025 யூபிலி ஆண்டு நிறைவுக்கு வரவுள்ள நிலையில், இந்நிறைவு நாள் நிகழ்வுகள் யாழ். மறைமாவட்ட பங்குகளில் மார்கழி மாதம் 28ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.

யாழ். புனித மரியன்னை பேராலயத்தில் பேராலய பங்குத்தந்தையும் யாழ். மறைக்கோட்ட முதல்வருமான அருட்தந்தை ஜெறோ செல்வநாயகம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் திருப்பலியும், யூபிலி சிலுவை ஸ்தாபிப்பும், யூபிலி கதவு பூட்டும் நிகழ்வும் இடம்பெற்றன.

திருப்பலியை யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்ததுடன், திருப்பலி நிறைவில் கடந்த வருடம் யூபிலி ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட நாளில் ஆயர் அவர்களால் ஆசீர்வதிக்கப்பட்ட யூபிலிச்சிலுவை, மரியன்னை பேராலயத்தில் இதற்கென அமைக்கப்பட்ட பிரத்தியேகமான இடத்தில் நிரந்தமாக கொலுவேற்றி வைக்கப்பட்டு யூபிலி ஆண்டு நிறைவின் அடையாளமாக ஆயர் அவர்களால் யூபிலி கதவு பூட்டப்படும் நிகழ்வும் இடம்பெற்றன.

இந்நிகழ்வில் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம், அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், இறைமக்களென பலரும் கலந்து செபித்தனர்.

By admin