யாழ். மறைமாவட்டத்தில் இவ்வருடம் கடைப்பிடிக்கப்படும் சமூகத் தொடர்பாடல் ஆண்டின் ஆரம்ப நிகழ்வுகள் தை மாதம் 11ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ் மறைமாவட்டத்தின் அனைத்து ஆலயங்களிலும் நடைபெற்றன.

யாழ். புனித மரியன்னை பேராலயத்தில் பங்குத்தந்தை அருட்தந்தை ஜெறோ செல்வநாயகம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற சிறப்பு நிகழ்வில் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் விசேட திருப்பலியும் புதிய ஆண்டு அங்குரார்ப்பண நிகழ்வும் இடம்பெற்றன.

இத்திருப்பலியில் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம், நிதி முகாமையாளர் அருட்தந்தை நேசநாயகம், மறைநதி கத்தோலிக்க ஊடகமைய இயக்குநர் அருட்தந்தை அன்ரன் ஸ்ரிபன், புனித வளனார் அச்சக முகாமையாளர் அருட்தந்தை எயின்ஸிலி றொசான் ஆகியோர் இணைந்து செபித்ததுடன் யாழ். மறைமாவட்த்தில் இயங்கும் கத்தோலிக்க ஊடகங்களான மறைநதி கத்தோலிக்க ஊடகமையம், பாதுகாவலன் அச்சகம், Bishop சவுந்தரம் மீடியா, இறை ஒளி, Holy Mary, தமிழ் Best, கடவுளின் மனிதம் ஆகிய ஊடக பணியாளர்களும் கலந்துகொண்டனர்.

“சமூக தொடர்பாடலினூடாக அமைதியின் ஆண்டை உருவாக்குவோம்” என்னும் கருப்பொருளில் இவ்வருடம் யாழ். மறைமாவட்டத்தில் சமூகத்தொடர்பாடல் ஆண்டு சிறப்பிக்கப்படவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

By admin