யாழ். மறைமாவட்டத்தில் பணியாற்றும் குருக்களுக்கான குருக்கள் தின சிறப்பு தியான வழிபாடு பங்குனி மாதம் 30ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் நடைபெற்றது.

மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் திருச்செபமாலை, ஒப்புரவு அருட்சாதனம், நற்கருணை வழிபாடு, தியான உரை என்பவற்றுடன் மாலை திருத்தைல மந்திரிப்பு திருப்பலியும் இடம்பெற்றது.

தியான உரையை அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை செல்வரட்ணம் அவர்கள் “நீங்கள் எனது நண்பர்கள்” என்னும் தலைப்பில் வழங்கினார்.

யாழ். புனித மரியன்னை பேராலயத்தில் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற திருத்தைலம் மந்திரிக்கும் திருச்சடங்கு திருப்பலியில் திருத்தைலம் மந்திரிப்பு குருக்களுக்கான குருத்துவ வாக்குறுதிகளை புதுப்பிக்கும் திருச்சடங்கு என்பன இடம்பெற்றன.

இத்தியானத்தில் யாழ். மறைமாவட்டத்தில் பணியாற்றும் 200 வரையான குருக்கள் பங்குபற்றியிருந்ததுடன் திருப்பலியில் குருக்கள், துறவிகள், அருட்சகோதர்கள், குருமட மாணவர்கள், இறைமக்களென பலரும் கலந்து செபித்தனர்.

By admin