யாழ். மறைமாவட்டத்தில் குருக்கள் சிலருக்கான பணிமாற்றங்கள் அண்மையில் நடைபெற்றுள்ளன.
அருட்தந்தை அமல்ராஜ் அவர்கள் மாதகல் பங்குத்தந்தையாகவும் அருட்தந்தை றோய் பேடினன்ட் அவர்கள் பலாலி பங்குத்தந்தையாகவும் அருட்தந்தை சுதர்சன் அவர்கள் ஊறணி பங்குத்தந்தையாகவும் அருட்தந்தை ஜெயரஞ்சன் அவர்கள் நவாலி பங்குத்தந்தையாகவும் அருட்தந்தை விமலசேகரன் வசந்தன் அவர்கள் வெற்றிலைக்கேணி – கட்டைக்காடு பங்குத்தந்தையாகவும் அருட்தந்தை அலோய் அருணேஸ்குமார் அவர்கள் கொழும்புத்துறை புனித பிரான்சிஸ் சவேரியார் உயர் குருத்துவக் கல்லூரி உருவாக்குநராகவும் அருட்தந்தை மைக் டொனால்ட் அவர்கள் அஞ்சனந்தாழ்வு பங்குத்தந்தையாகவும் அருட்தந்தை செபஸ்ரியன் எஸ்ராகு அவர்கள் பண்டத்தரிப்பு புனித பற்றிமா அன்னை திருத்தல வதிவிட குருவாகவும் அருட்தந்தை அன்ரனிதாஸ் அவர்கள் சாட்டி புனித சிந்தாத்திரை அன்னை யாத்திரைதல வதிவிட குருவாகவும் நியமனம் பெற்றுள்ளனர்.