யாழ். மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழுவால் முன்னெடுக்கபட்ட மறைமவாட்ட இளையோருக்கான சிறப்பு ஒன்றுகூடல், இயக்குநர் அருட்தந்தை ஜோன் குருஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த மாதம் 26, 27ஆம் திகதிகளில் நடைபெற்றது.

யாழ். மறைமாவட்ட மறைக்கல்வி நிலையத்தில் 26ஆம் திகதி சனிக்கிழமை ஆரம்பமாகிய இந்நிகழ்வில் பொதுக்கூட்டமும் அகவொளி குடும்பநல நிலைய உதவி இயக்குனர் அருட்தந்தை அன்ரன் ஜெறாட் அவர்களின் தலைமைத்துவம் தொடர்பான கருத்துரையும் இடம்பெற்றன.

தொடர்ந்து புதிய நிர்வாகத்தெரிவு நடைபெற்றதுடன் புதிய தலைவராக மல்வம் பங்கைச் சேர்ந்த அன்ரன் நிராஜ் அவர்களும், செயலாளராக பருத்தித்துறைப் பங்கைச் சேர்ந்த றொசானா வின்சன் அவர்களும், பொருளாராக நல்லூர் ஆசிர்வாதப்பர் பங்கைச் சேர்ந்த யோசேப் விக்னராஜ் றெக்னோ அவர்களும், உப தலைவராக மணற்காடு பங்கைச் சேர்ந்த ஜெகதாஸ் ஜெபதாஸ், அவர்களும் செயலாளராக நாவாந்துறை பங்கைச் சேர்ந்த லக்ஜினி செல்வா அவர்களும், ஊடக இணைப்பாளராக குருநகர் பங்கைச் சேர்ந்த கட்சன் பிராங் விதுசன் அவர்களும் தெரிவுசெய்யப்பட்டனர்.

தொடர்ந்து திருப்பலி இடம்பெற்றதுடன் இத்திருப்பலியில் புதிய நிர்வாகத்தினர் தமது நிர்வாக பொறுப்புக்களை ஏற்றுக்கொண்டனர்.

திருப்பலியைத் தொடர்ந்து இளையோர் மணற்காடு பிரதேசத்திற்கு களப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெற்ற ஒன்றுகூடலிலும் இரவு விருந்திலும் கலந்துகொண்டதுடன் 27ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை மணற்காடு புனித அந்தோனியார் ஆலயத்தில் நடைபெற்ற திருப்பலியிலும் பங்குபற்றினர்.

இந்நிகழ்வுகளில் யாழ். மறைமாவட்ட பங்குகளை சேர்ந்த 30ற்கும் அதிகமான இளையோர் கலந்துகொண்டனர்.

By admin