யாழ். மறைக்கோட்ட பொதுநிலையினர் கழகத்தினால் நாவாந்துறை பங்கில் முன்னெடுக்கப்பட்ட வீதி நாடகம் பங்குனி மாதம் 01ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நாவாந்துறை புனித நீக்கிலார் ஆலய முன்றலில் நடைபெற்றது.
மறைக்கோட்ட இணைப்பாளர் அருட்தந்தை கிறிஸ்ரி ஞானராஜ் றொகான் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சமூக தொடர்பாடல் ஆண்டை சிறப்பித்து தொடர்பாடல் சாதனங்களை எவ்வாறு பயன்படுத்துவது தொடர்பான வீதி நாடகம், கழக பொருளாளர் திரு. தீபக் அவர்களின் நெறியாள்கையில் குருநகர் புனித யாகப்பர் ஆலய பீடப்பணியாளர்களால் ஆற்றுகை செய்யப்பட்டது.
இந்நிகழ்வில் கழக அங்கத்தவர்கள், பங்குமக்களென பலரும் கலந்துகொண்டனர்.

