வணக்கமாத சிறப்பு நிகழ்வாக யாழ். மறைக்கோட்ட இளையோர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட செபமாலைத்தியானம் ஐப்பசி மாதம் 25ஆம் திகதி சனிக்கிழமை கொழும்புத்துறை புனித செபமாலை அன்னை ஆலயத்தில் நடைபெற்றது.
ஒன்றிய இயக்குநர் அருட்தந்தை அருளானந்தம் யாவிஸ் அவர்களின் வழிநடத்தலில் ஒன்றிய தலைவர் செல்வன் டிசான் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் நற்கருணை ஆராதனை, திருச்செபமாலை, மெழுகுவர்த்தி பவனி, என்பன நடைபெற்றன.
இந்நிகழ்வில் மறைக்கோட்ட பங்குகளை சேர்ந்த 50ற்கும் அதிகமான இளையோர் பங்குபற்றியிருந்தனர்.

