யாழ். மறைக்கோட்ட இளையோர் ஒன்றிய செயற்குழு கூட்டம் யூலை மாதம் 13ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பாண்டியன்தாழ்வு புனித அன்னம்மாள் ஆலயத்தில் நடைபெற்றது.
ஒன்றிய இணைப்பாளர் அருட்தந்தை யாவிஸ் அவர்களின் வழிகாட்டலில் ஒன்றிய தலைவர் செல்வன் டி~hன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் ஒன்றியத்தின் எதிர்கால திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
அத்துடன் இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை யோன் குருஸ் மற்றும் மறைமாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கலந்து மறைமாவட்ட ரீதியாக இளையோரின் செயற்பாடுகள் மற்றும் தேசிய இளையோர் தினம் தொடர்பாகவும் கலந்துரையாடினர்.
இந்நிகழ்வில் 50ற்கும் அதிகமான இளையோர் பங்குபற்றியதுடன் பாண்டியன்தாழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை நேசராஜா அவர்களும் கலந்துகொண்டார்.