யாழ். மறைக்கோட்ட இளையோருக்கான தவக்கால தியானம் பங்குனி மாதம் 01ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை தீவகம் சின்னமடு செபமாலை அன்னை யாத்திரைத்தலத்தில் நடைபெற்றது.

மறைக்கோட்ட இளையோர் ஒன்றிய இணைப்பாளர் அருட்தந்தை அருளானந்தம் யாவிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இத்தியானத்தில் சிலுவைப்பாதை, நற்கருணை வழிபாடு, தலைமைத்துவ பயிற்சி, சமூக தொடர்பாடல் விழிப்புணர்வு கருத்தமர்வு என்பன நடைபெற்றன.

நற்கருணை ஆராதனையை செபமாலைதாசர் சபை அருட்தந்தை ராஜசேகர் அவர்களும், தலைமைத்துவ பயிற்சி மற்றும் விழிப்புணர்வு கருத்தமர்வை இளையோர் ஆணைக்குழு வளவாளர்களும் நெறிப்படுத்தினர்.

இத்தியானத்தில் யாழ். மறைக்கோட்ட பங்குகளை சேர்ந்த 80 வரையான இளையோர் பங்குபற்றி பயனடைந்தனர்.

 

By admin