யாழ். போதனா வைத்தியசாலை வளாகத்தில் அமைந்துள்ள புனித ஆரோக்கிய அன்னை சிற்றாலயத்தில் உயிர்த்த ஞாயிறு திருப்பலி வைத்தியசாலை ஆன்மீக இயக்குநர் அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை டினுசன் பியூமால் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் சித்திரை மாதம் 05ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருப்பலியை யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.
திருப்பலியில் வைத்தியர்கள், தாதியர்கள், தாதிய மாணவர்கள், வைத்தியசாலை ஊழியர்கள் கலந்துசெபித்தனர்.

